'விடா முயற்சி' எதிர்பார்த்த அளவிற்கு வணிகரீதியான வெற்றியை பெறாததால் அஜித் குமார் மீது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தாலும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகி வரும் :குட் பேட் அக்லி' எனும் திரைப்படத்தில் அஜித் குமாருடன் நடிகை சிம்ரன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'குட் பேட் அக்லி' எனும் திரைப்படத்தில் அஜித் குமார், திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு , ஷைன் டாம் சாக்கோ ஆகிய நட்சத்திர பட்டாளத்துடன் லேட்டஸ்ட்டாக நடிகை சிம்ரன் இணைந்திருக்கிறார்.
அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். எக்சன் வித் கொமடி என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிம்ரன் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அஜித்குமார்- சிம்ரன் நடிப்பில் 'அவள் வருவாளா', 'வாலி', 'உன்னைக் கொடு என்னைத் தருவேன்' ஆகிய மூன்று படங்களைத் தொடர்ந்து மீண்டும் இந்த ஜோடி இணைந்து இருக்கிறது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஜித் குமாருடன் சிம்ரன் இணைந்து நடித்திருப்பதால் இந்த ஜோடியின் நடிப்பில் வெளியாகும் 'குட் பேட் அக்லி' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM