பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஹைபோகால்சீமியா எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 7

19 Feb, 2025 | 05:39 PM
image

இன்றைய திகதியில் திருமணமான தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறப்பு என்பது அவர்களின் எதிர்பார்ப்பை விட சவால் மிக்கதாக இருக்கிறது. இருப்பினும் சுகாதாரத்துறை  பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் உடனடியாகவும், துல்லியமாகவும் கண்டறிந்து சிகிச்சை அளித்து முழுமையான நிவாரணத்தை வழங்கி வருகிறது.

பிறக்கும் பச்சிளம் குழந்தைகளில் சிலருக்கு ஹைபோகால்சீமியா எனும் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உண்டு. இதற்கு தற்போது நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும், பெண்மணி ஒருவர் கருத்தரித்து இருக்கும் காலங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டாலும், ஹைப்பர்பாரா தைரொய்டிசம் எனும் பாதிப்பு ஏற்பட்டாலும், மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஹைபோகால்சீவியா பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். 

பெரும்பாலும் பிறந்த இரண்டு நாட்களுக்குள் குழந்தைகளுக்கு குருதியில் கால்சிய சத்தின் அளவு குறித்த பரிசோதனையை மேற்கொள்வார்கள். இதில் ஏதேனும் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டிருந்தால் குழந்தைகளுக்கு சில வினாடிகள் நடுக்கம் ஏற்படலாம் அல்லது மூச்சுத் திணறல் ஏற்படலாம் அல்லது தாய்ப்பால் அருந்துவதில் தடை ஏற்படலாம்.

இத்தகைய அறிகுறிகள் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் வைத்தியர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அந்த குழந்தையை அனுமதித்து சிகிச்சையை மேற்கொள்வார்கள்.

குழந்தையின் எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் , அவர்களுடைய எலும்பின் வலிமை சீராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இதற்கு உடனடியாக நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணத்தை வழங்குவார்கள்.  சில தருணங்களில் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலமாகவே இத்தகைய பாதிப்பை குறைக்க இயலும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வைத்தியர் பிரகாஷ்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15