பொம்மைகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் கைது

19 Feb, 2025 | 05:12 PM
image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து இன்றைய தினம் காலை 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலையத்தில் இருந்த பொலிஸ் மோப்ப நாய் ஒன்று சந்தேக நபர் கொண்டு பயணப் பொதிகளை மோப்பமிட்டு சத்தமிட்டுள்ளது.

பின்னர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்கள் இணைந்து, சந்தேக நபர் கொண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பொம்மைகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 300 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் !

2025-03-21 11:51:15
news-image

வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து :...

2025-03-21 11:31:24
news-image

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஆஜராகாது இருந்தால்...

2025-03-21 11:13:13
news-image

மாத்தளையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 95...

2025-03-21 11:01:18
news-image

தலவாக்கலை மிடில்டன் பஸார் மதுபானசாலை அருகில்...

2025-03-21 10:47:00
news-image

முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு

2025-03-21 10:49:14
news-image

பரீட்சார்த்த வேலையை மீண்டும் செய்தால் நாட்டுக்கு...

2025-03-21 10:45:19
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் எமது...

2025-03-21 09:54:11
news-image

அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள்...

2025-03-21 09:52:35
news-image

அம்பாறை மாவட்டத்தில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கு...

2025-03-21 10:27:27
news-image

மட்டக்களப்பில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 118...

2025-03-21 10:10:09
news-image

யாழில் பஸ் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-03-21 10:19:06