அமெரிக்க ஜனாதிபதிக்கும் தனக்கும் கருத்துவேறுபாடுகள் உள்ளதை வெளிப்படுத்தும் விதத்தில் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி கருத்து வெளியிட்டுள்ளர்ர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 'தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்" என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
உக்ரைன் ஜனாதிபதியாக தன்னை யாராவது மாற்றவிரும்பினால் அது நடைபெறாது என குறிப்பிட்டுள்ள அவர் 58 வீதமான உக்ரைன் மக்கள் தன்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் குறித்து ரஸ்யா பல பொய்யான தகவல்களை பரப்பிவருவதாக தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மீது சகலமரியாதையையும் வைத்திருக்கும் அதேவேளை அவர் தவறான தகவல் உலகத்தில் வாழ்கி;ன்றார் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதிக்கான மக்கள் ஆதரவு 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
தனக்கான மக்கள் ஆதரவு குறித்த பொய்யான புள்ளிவிபரத்தை ரஸ்யாவே பரப்பியுள்ளது என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் உள்ள அபூர்வமான கனியவளங்களான லித்தியம் மற்றும் டைட்டானியத்தின் ஒரு பகுதியை அமெரிக்க ஜனாதிபதி கோரியுள்ளரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி அந்த கனியவளங்களின் 50 வீதத்தின் உரிமையை அமெரிக்கா கோரியதாலும் எந்த பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காததாலும் தான் அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நான் உக்ரைனை பாதுகாக்கின்றேன் என்னால் அதனை விற்க முடியாது,எங்கள் நாட்டை என்னால் விற்க முடியாது என வொலொடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஸ்யாவை சவுதி அரேபிய பேச்சுவார்த்தைகள் மூலம் அமெரிக்கா மீண்டும் சர்வதேச அரங்கிற்கு கொண்டுவந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்கா உதவியை குறைத்தால் ஐரோப்பா என்ன ஆதரவை வழங்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவிற்கு பரந்துபட்ட விட்டுக்கொடுப்புகளை செய்வது குறித்த யோசனைகளை நிராகரித்துள்ள அவர் இந்த யோசனையை உக்ரைன் மக்கள் நிராகரிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM