நடிகைகளுக்கு தோற்றமும் , தோற்றப் பொலிவும் முக்கியமில்லை.. திறமை தான் முதன்மையானது என்பதனை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் உணர்த்தும் வகையில் ' தும்பா' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அஃகேனம்' எனும் திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இதற்குரிய பிரத்யேக காணொளியையும் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் கே. உதய் இயக்கத்தில் உருவாகி வரும் 'அஃகேனம்' எனும் திரைப்படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீண் ராஜா , ஆதித்யா ஷிவ் பிங்க், ரமேஷ் திலக், ஜி. எம். சுந்தர், சீதா, ஆதித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ & பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்ற பார்வை மற்றும் பிரத்யேக காணொளி ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் படத்தின் தலைப்பிற்கான பொருளை எக்சனுடன் கூடிய காட்சியாக வடிவமைத்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இதனிடையே அருண்பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் இதற்கு முன் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் வெளியான ' அன்பிற்கினியாள் ' எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்த இருவரும் அஃகேனம் படத்தில் இணைந்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM