இலங்­கையில் இருந்து இந்­தி­யா­வுக்கு விமான மூலம்  மடி­க­­ணனியில் 40 இலட் சம் ரூபா பெறு­ம­தி­யான தங்­கத்தை கடத்திச் செல்ல முற்­பட்ட ஒரு­வர் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து நேற்று அதி­காலை சுங்கப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­த­தாக விமா­ன­ நி­லைய பொலிஸார் தெரி­வித்­தனர். 

பண்­டா­ர­நா­யக்கா சர்­வ­தேச விமான நிலை­யத்தில் இருந்து நேற்று அதி­காலை இந்­தியாவின் மும்­பைக்கு செல்ல இருந்த விமா­னத்தில் பய­ணிக்க விமா­ன­ நி­லை­யத்­திற்கு வந்­த­டைந்­துள்ள மாவ­னெல்லைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த 40 வய­து­டைய குறித்த நபரின்  மடிக் கண­னியை சுங்­கப்­பி­ரி­வினர் சோதனை செய்­த­போது அதில் மிக நுட்­ப­மான முறையில் 40 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்­கம் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததை கண்­டு­பி­டித்­தனர் .

இதனைத் தொடர்ந்து அவரை சுங்கப் பிரி­வினர் கைது செய்­த­துடன் விசா­ர­ணைகள் இடம் பெற்­று­வ­ரு­வ­துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.