கிளிநொச்சி இரணைதீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்களுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், இதில் முதல்குற்றமுள்ள உள்ள ஒருவருக்கு 18 மாதகால கட்டாயச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 09 ஆம் திகதி அதிகாலை இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் 09 ஆம் திகதி மாலை கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, குறித்த 14 பேருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்து அன்றைய தினம் இரவு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று புதன்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கானது இன்றையதினம் பகல் விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் ஒரு இழுவைப்படகுடன் தொடர்புபட்ட பதினொரு பேருக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பன்னிரெண்டு மாத சிறையும் இரண்டாவது குற்றச் சாட்டுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனையும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், செலுத்த தவறின் ஆறுமாத சிறைத் தண்டனையும் படகை செலுத்தியமை மற்றும் படகு உரிமை ஆகிய இரண்டு குற்றச் சாட்டுக்கும் தலா ஆறு மில்லியன் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் தண்டம் செலுத்த தவறின் தலா ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மற்றைய படகுடன் தொடர்பட்ட மூன்று பேருக்கும் முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பன்னிரெண்டு மாத சிறையும் இரண்டாவது குற்றச் சாட்டுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனையும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், செலுத்த தவறின் ஆறுமாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதில் ஏற்கனவே யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு முதல் குற்றச்சாட்டு உள்ள ஒருவருக்கு பதினெட்டு மாதகால கட்டாய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM