எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றார் - அவர் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவேண்டும் - சல்மான் ருஸ்டி

Published By: Rajeeban

19 Feb, 2025 | 03:07 PM
image

அமெரிக்காவின் கோடீஸ்வரர் எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றார் என குற்றம்சாட்டியுள்ள பிரபல எழுத்தாளர் சல்மான் ருஸ்டி அவர் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவேண்டும் என தெரிவித்துள்ளார்.

வெளிப்படையாக கருத்துதெரிவிப்பவரும் கொலைமுயற்சியிலிருந்து உயிர் தப்பியவருமான சல்மான் ருஸ்டி கருத்து சுதந்திரம் தொடர்பில் எலான் மஸ்க்கின் நிலைப்பாடு குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மஸ்க்கின் எக்ஸ் தளம் உண்மையாகவே கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றதா என்ற கேள்விக்கு எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு பதில் அதற்கு ஊறு விளைவிக்கின்றார் என சல்மான் ருஸ்டி கருத்து வெளியிட்டுள்ளார்.

தீவிரவலதுசாரிகளிற்கு சார்பாக கருத்துருவாக்கத்தில் மஸ்க் ஈடுபட்டுள்ளார் என சல்மான் ருஸ்டி கருத்துசுதந்திரத்திற்கு எதிராக செயற்பட்டுக்கொண்டே எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதாக தெரிவிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

மஸ்க் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை,அவரது சமூக வலையமைப்பு தீவிரவலதுசாரிகளிற்கு ஆதரவான கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகி;ன்றது,என தெரிவித்துள்ள சல்மான் ருஸ்டி கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் உன்னதமான பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துக்கொண்டே அதற்கு எதிராக செயற்படுவது நேர்மையற்ற விடயம், செவ்வாய்கிரகத்திற்கு செல்லும் முதல்மனிதனாக எலான்  மஸ்க் விளங்கவேண்டும் என நான் விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு:...

2025-03-25 16:04:39
news-image

யேமன் மீதான தாக்குதல் திட்டங்களை தவறுதலாக...

2025-03-25 13:19:10
news-image

ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்டின்...

2025-03-25 14:28:26
news-image

நியூசிலாந்தின் தென்தீவை தாக்கியது கடுமையான பூகம்பம்

2025-03-25 10:38:38
news-image

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து மீறும்...

2025-03-25 11:48:44
news-image

சாம்சங் நிறுவனத்தின் இணை தலைமை அதிகாரி...

2025-03-25 10:36:47
news-image

பேருந்து நிலைய பயணிகள் மீது காரால்...

2025-03-24 16:03:22
news-image

சென்னையில்பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு...

2025-03-24 15:46:45
news-image

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக தெரிவு...

2025-03-24 14:39:33
news-image

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக...

2025-03-24 13:15:46
news-image

சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு தூதரகம் மூலம்...

2025-03-24 12:42:36
news-image

டிரம்பின் முன்னாள் மருமகளுடன் உறவு -...

2025-03-24 11:31:32