1948 பிப்ரவரி 4 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இலங்கையின் சுதந்திரதினத்தை கௌரவிக்கும் முகமாக பிராந்திய அரசியல் தலைவர்களும்,பிரதிநிதிகளும் ஒன்று கூடும் இலங்கையின் தேசியதின கொண்டாட்டங்களுக்கு முன்னர் கிரீன்பீஸ் தெற்காசியா பெருங்கடல் பாதுகாப்புக்கான பலமான செய்தியை கொழும்பில் வெளியிடுகின்றது.
கடல்களில் பெரிய அளவிலான சரணாலயங்களை உருவாக்க வழிவகுக்கும் உலகளாவிய பெருங்கடல் ஒப்பந்தத்திற்கு பிராந்தியத்தின் அரசியல் தலைவர்கள் ஆதரவாக செயலாற்றியமையை வரவேற்கும் விதமாக கொழும்பின் முக்கிய,உயரமானஹோட்டல் ஒன்றில் 'தெற்காசியா: பெருங்கடல் ஒப்பந்தத்தின் முன்னணி!'என்று எழுதப்பட்ட ஓர் பெரியபதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
'இவ்வாறு செயற்படுவதன் மூலம் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள நாடுகள் ஆழ் கடல்களில் கடலின் உயிரியல் பன்முகத்தன்மையினை பாதுகாப்பதிலும்,காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதிலுமான துணிச்சலான,தொலைநோக்குச் சிந்தனை கொண்ட அமைப்பை வெளிப்படுத்துகின்றன.'எனகிரீன்பீஸ் தெற்காசியாவின் பிரச்சாரகர் அனீடாபெரேரா கூறினார்.
'பெருங்கடல்கள் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவு இறையாண்மைக்கு இன்றியமையாத ஒருவிடயம் என்பதுடன்,தெற்காசியாவிலும்,பிற இடங்களிலும் வழமையாக இப்பொழுது இடம்பெறும் திடீர் காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை நெருக்கடியை தணிப்பதற்கும் இது முக்கியமாக செயற்படுகின்றது.'எனகிரீன்பீஸ் தெற்காசியாவின் துணைதிட்ட இயக்குநர் அவினாஸ் சன்சல் கூறினார்.
'இலங்கையின் சுதந்திரதினத்தை கொண்டாடும் இத்தருணத்தில்,அண்மையில் நமதுஅரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்குமான எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில்,குறுகியகால எல்லையினுள் பயனுள்ளவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக ஜூன் 2025 இல் நடைபெறவுள்ள ஐ. நா. பெருங்கடல் மாநாட்டிற்குஉலகளாவியபெருங்கடல் ஒப்பந்தத்தின் முழுமையான அங்கீகரிப்பை சரியான நேரத்தில் உறுதி செய்யுமாறு வலியுறுத்துகின்றது எனஅனீடா பெரேரா குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM