சம்பியன்ஸ் கிண்ண ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து

19 Feb, 2025 | 01:11 PM
image

(நெவில் அன்தனி)

சிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடான பாகிஸ்தான், 2017இல் வென்ற சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான முதல் முயற்சியாக நியூஸிலாந்தை ஏ குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் இன்று (19) எதிர்கொள்கிறது.

இப் போட்டி கராச்சி தேசிய விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சகலதுறைகளிலும் திறமை உடைய வீரர்களுடனான சமபலம் கொண்ட இரண்டு அணிகள் ஆரம்பப் போட்டியில் விளையாடுவதால் இந்தப் போட்டி கடைசிவரை விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு அணிகளும் அண்மையில் பங்குபற்றிய மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடையாத அணியாக சம்பியனான நியூஸிலாந்துக்கு இன்றைய போட்டியில் பாகிஸ்தான் பலத்த சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தத் தொடரில் பாகிஸ்தானை லீக் சுற்றில் 78 ஓட்டங்களாலும் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்களாலும் நியூஸிலாந்து வெற்றிகொண்டிருந்தது.

எவ்வாறாயினும் அந்தத் தோல்விகளைப் புறந்தள்ளிவைத்துவிட்டு இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தனது இரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்க பாகிஸ்தான் முயற்சிக்கும்.

'சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள பாகிஸ்தானுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. 2017இல் சம்பியனான அணியில் இடம்பெற்ற சிலர் இம்முறையும் விளையாடுகின்றனர். அப்போது (2017இல்) பெறப்பட்ட அனுபவங்களை அவர்களிட மிருந்து   குறிப்பாக பாபர் அஸாமிடமிருந்து ஏனையவர்கள் பெற்றுக்கொள்வார்கள்' என பாகிஸ்தானை சம்பியனாக வழிநடத்திய அப்போதைய அணித் தலைவர் சர்பராஸ் அஹ்மத் தெரிவித்தார்.

சமபலம் கொண்ட பாகிஸ்தான் அணியில் அனுபவசாலிகள் பலர் இடம்பெறுவதுடன் அவர்கள் தமது அணியின் வெற்றிக்காக 100 வீதம் திறமையை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.

அண்மையில் நடந்து முடிந்த மும்முனைத் தொடரில் 3 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 219 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற சல்மான் அலி, ஒரு சதம் உட்பட 171 ஓட்டங்களைப் பெற்ற மொஹமத் ரிஸ்வான், ஒரு அரைச் சதத்துடன் 135 ஓட்டங்களைப் பெற்ற பக்கார் ஸமான், 6 விக்கெட்களை வீழ்த்திய ஷஹீன் ஷா அப்றிடி ஆகியோர் இந்தத் தொடரிலும் அசத்தவுள்ளனர்.

இதேவேளை, இரண்டு முக்கிய பந்துவீச்சாளர்கள் உபாதை காரணமாக அணியில் இடம்பெறாதது நியூஸிலாந்து அணிக்கு பலத்த தாக்கத்தை கொடுத்துள்ளது. உபாதை காரணமாக லொக்கி பேர்கசன் கடைசி நேரத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டு கைல் ஜெமிசன் இணைத்துக்கொள்ளப்பட்டார். பென் சியர்ஸ் உபாதை காரணமாக அணியில் இணைக்கப்படவில்லை.

நடந்து முடிந்த மும்முனை தொடரில் ஒரு சதத்துடன் 225 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற கேன் வில்லியம்சன், ஒரு சதத்துடன் 154 ஓட்டங்களைப் பெற்ற  க்லென்  பிலிப்ஸ், 2 அரைச் சதங்களுடன் 148 ஓட்டங்களைப் பெற்ற டெரில் மிச்செல், ஒரு அரைச் சதத்துடன் 145 ஓட்டங்களைப் பெற்ற டெவன் கொன்வே, 6 விக்கெட்களைக் கைப்பற்றிய வில் ஓ'ரூக், தலா 5 விக்கெட்களை வீழ்த்திய மெட் ஹென்றி, மைக்கல் ப்றேஸ்வெல், மிச்செல் சென்ட்னர் ஆகிய அனைவரும் தமது அணியின் வெற்றிக்காக தொடர்ந்தும் கடுமையாக முயற்சிக்கவுள்ளனர்.

அணிகள்

பாகிஸ்தான்: மொஹமத் ரிஸ்வான் (தலைவர்) பாபர் அஸாம், பக்கார் ஸமான், கம்ரன் குலாம், சவூத் ஷக்கீல், தய்யப் தாஹிர், பாஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி அகா, உஸ்மான் கான், அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹம்மத் ஹஸ்னைன், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி. 

நியூஸிலாந்து: மிச்செல் சென்ட்னர் (தலைவர்), மிச்செல் ப்றேஸ்வெல், மார்க் செப்மன், டெவன் கொன்வே, கய்ல் ஜெமிசன், மெட் ஹென்றி, டொம் லெதம், டெரில் மி ச்செல், வில் ஓ'ரூக், க்லென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ரா, நேதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங், ஜேக்கப் டஃபி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-21 18:38:21
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04