முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்துஐயன்கட்டுக் குளத்தின் 2025ஆம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை தொடர்பான கூட்டம் நேற்று (18) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்ப்பாசன பொறியியலாளர் உட்பட சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள், கிராம அலுவலர்கள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5 ஏக்கர் நிலப்பரப்பு சிறுபோக செய்கைக்காக தீர்மானிக்கப்பட்ட நிலையில் 3686.5 ஏக்கர் விவசாய நிலத்தில் நெற்செய்கையும் 878 ஏக்கர் விவசாய நிலத்தில் ஏனைய உணவுப் பயிர்ச்செய்கையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுபோக செய்கைக்கான வாய்க்கால் துப்பரவு, நீர் வழங்கல், கால்நடை கட்டுப்பாடு, நன்னீர் மீன்பிடி முதலான பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM