இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், புதுமுக நடிகர் ஜெகவீர் கதையின் நாயகனாக அறிமுகமான '2K லவ் ஸ்டோரி' எனும் திரைப்படம் காதலர் தினமான கடந்த 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியானது. கலவையான விமர்சனங்களால் உற்சாகமடைந்த படக்குழுவினர் குறிப்பாக புதுமுக நடிகர் ஜெகவீர் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதற்கான பிரத்யேக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த தருணத்தில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், '' இந்தப் படத்தின் மூலம் சுசீந்திரன் கம் பேக் என விமர்சனம் எழுந்திருக்கிறது. இதற்காக ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், புதுமுக நடிகர், நடிகைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கும் நடிகர் ஜெகவீர் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை எட்டி பிடிப்பார் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM