நீண்ட நேரம் உட்கார்ந்து நிலையிலேயே பணியாற்றுகிறீர்கள் என்றால் உடற்பயிற்சி, நடை பயிற்சி, ஏரோபிக் பயிற்சி என எந்த உடல் இயக்க செயல்பாட்டில் ஈடுபடவில்லை என்றால் உங்களுடைய தசை பகுதிகளில் வலி ஏற்பட்டால் உங்களுக்கு பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் கூடும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
உங்களுடைய இடுப்புப் பகுதி, விட்ட பகுதி, காலின் மேல் பகுதி ஆகிய இடங்களில் வலியோ அல்லது உணர்வின்மை பாதிப்போ ஏற்பட்டால் நீங்கள் பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் எனும் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கக்கூடும். பொதுவாக எம்முடைய கீழ் முதுகு பக்கத்தில் பிரிஃபார்மிஸ் எனும் தசை அமையப்பெற்றுள்ளது. இந்த தசை சயாட்டிகா எனும் நரம்பின் மேற்பகுதியில் உள்ளது. இந்தப் பகுதியில் ஏற்படும் காயம், வீக்கம் அல்லது தசைப் பிடிப்பின் காரணமாக பிரீபார்மிஸ் சிண்ட்ரோம் எனும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
உங்களுடைய கீழ் முதுகெலும்பு பகுதியிலிருந்து பிட்டம் வழியாக தொடைகளின் மேல் பகுதி வரை இந்த பிரிஃபார்மிஸ் தசை இருக்கிறது. இது உங்களது இயக்கத்தின் போது ஒவ்வொரு பக்கமும் சீராக இயங்கி உங்களின் செயலுக்கு உதவுகிறது. இந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் அதனை துல்லியமாக அவதானிக்க வேண்டும்.
சயாட்டிக் நரம்பு வலி பாதிப்பிற்கும் , இத்தகைய பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பிற்கும் வேறுபாடு உண்டு. தசைகளில் ஏற்படும் வீக்கம், தசை இறுக்கம், தசை பிடிப்பு போன்ற காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இதற்கு உடனடியாக சிகிச்சை பெறவில்லை என்றால் மாடிப்படி ஏறுவதற்கும், நடப்பதற்கும் கடினம் ஆகிவிடும். வேறு சிலரால் 20 நிமிடங்களுக்கு மேல் ஓரிடத்தில் அமர்ந்திருக்க இயலாத சூழலும் உண்டாகும்.
சிலருக்கு வலி, எரிச்சல், உணர்வின்மை போன்ற அறிகுறிகளை குறிப்பிட்ட பகுதியில் உண்டாக்கும். வேறு சிலருக்கு உட்கார்ந்திருக்கும் நிலையிலும், வேறு சிலருக்கு மாடிப்படி ஏறும் தருணங்களில் மட்டும் இத்தகைய அறிகுறி உண்டாகலாம். இத்தகைய அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு சென்றால். வைத்தியர்கள் உங்களுக்கு அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், இ எம் ஜி எனப்படும் எலக்ட்ரோமயோகிராம் போன்ற பரிசோதனைகள் மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். வலி தீவிரமாக இருந்தால் அதனை குறைப்பதற்கான வலி நிவாரண சிகிச்சையை மேற்கொள்வர். அத்துடன் இத்தகைய பாதிப்பு சீரடைவதற்காக பிரத்யேக இயன்முறை சிகிச்சை முறையையும் பின்பற்ற வேண்டியதிருக்கும். நவீன தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட மருந்தியல் சிகிச்சை மற்றும் இயன்முறை சிகிச்சை ஆகிய சிகிச்சைகளை ஒருங்கிணைந்து பெறுவதன் மூலம் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.
வைத்தியர் அபிஷேக்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM