(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் நேற்று செவ்வாய்கிழமை (18) பாராளுமன்றத்தில் திருத்தங்கள் ஏதுமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்யை தினம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இராசமாணிக்கம் சாணக்கியன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் களான நிசாம் காரியப்பர், ரோஹித அபேகுனவர்தன மற்றும் ஜே.சி.அலவத்துவல ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனு கோரலுக்கான சட்ட மூலத்துக்கு எந்த நிபந்தனையும் இன்றி நாம் ஆதரவளித்துள்ளோம்.
மார்ச் 21ஆம் திகதி வரை பாராளுமன்றத்தில் வரவு - செலவு திட்ட விவாதத்தில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஆற்ற வேண்டிய பணிகள் பல உள்ளன.
எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னர் ஆரம்பமாகவுள்ள குழுநிலை விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
எனவே இந்த வரவு - செலவு திட்ட விவாத காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்களது அரசியலமைப்பு ரீதியான கடமையை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
எனவே மார்ச் 21ஆம் திகதியின் பின்னர் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்குமாறு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். எதிர்க்கட்சிகள் தேர்தலைக் காலம் தாழ்த்துமாறு கோருவதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
பாராளுமன்ற செயற்பாடுகள் எந்தளவுக்கு சிக்கலானவை என்பது புதிதாக வந்தவர்களுக்கு தெரியாது. எனவே அவர்கள் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதுமல்ல.
ஆளுந்தரப்பிலுள்ள சிலர் தேர்தல் ஆணைக்குழுவை தமது கைப்பாவையாக காண்பிக்க முற்படுகின்றனர். இது தவறாகும். பாராளுமன்றத்தைக் கூட்டி சட்ட மூலங்களை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய அதிகாரம் ஆளுங்கட்சிக்கு உண்டு.
ஆனால் தேர்தலை நடத்தும் தினத்தையோ, வேட்புமனு தாக்கலுக்கான காலத்தையோ அரசாங்கத்தால் தீர்மானிக்க முடியாது. அரசாங்கத்தின் தாளத்துக்கு நடனமாடுவதற்கு எதிர்க்கட்சிகளோ தேர்தல் ஆணைக்குழுவோ தயாராக இல்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM