ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால் அசௌகரியத்திற்குள்ளாகிய நோயாளர்கள்

18 Feb, 2025 | 05:22 PM
image

(செ.சுபதர்ஷனி)

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (18) வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகைத் தந்திருந்த பெருமளவான நோயாளர்கள் அசௌகரியத்திற்கு முகம் கொடுக்க நேர்ந்ததுடன், சிகிச்சைக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஹோமாகம வைத்தியசாலையின் நிர்வாக சீர்குலைவு காரணமாக வைத்திய சேவையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, மருத்துவ கண்காணிப்பாளரின் செயற்பாடுகளுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை ஹோமாகம ஆரம்ப வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ஹோமாகம வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளரின் கடுமையான நிர்வாகத்தினால் வைத்திய சேவைகள் சீர்குலைந்துள்ளதாக அம்மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில்  செவ்வாய்க்கிழமை குறித்த வைத்தியரின் செயற்பாடுகளுக்கு எதிராக அவ்வைத்தியசாலையின் அனைத்து வைத்தியர்களும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த சிகிச்சைப் பிரிவுக்கு வருகைத் தந்திருந்த பெருமளவான நோயாளர்கள் கடும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்ததுடன் வைத்திய பரிசோதனைக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது.

 மேற்படி தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் நிர்வாகத்தினருக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

தற்போது வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள வைத்தியருக்கு அரசியல் ஆதரவு உள்ளமையால் வைத்தியசாலையினுள் தனது அதிகாரத்தை பிரயோகித்து வருவதாக ஹோமாகம வைத்தியசாலையின் வைத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மேலும் வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளரின் செயற்பாடுகளினால் நோயாளர் பராமரிப்பு மற்றும் வைத்திய சேவையை வழங்குவதிலும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த வாரம் முழுவதும் வைத்தியசாலையில் நிலவிவந்த நிர்வாக பிரச்சினைக்கு பிராந்திய சுகாதார பணிப்பாளரின் தலையீட்டுடன் தீர்வு காண முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை. 

இதேவேளை மாரவில வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த வைத்தியர் அரசாங்கத்தின் உயர் அதிகாரியின் ஆதரவுடன் ஹோமாகம வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16
news-image

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2025-03-21 13:00:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது...

2025-03-21 13:10:21
news-image

நாட்டை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கைகளுக்கு...

2025-03-21 13:09:27
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் ;...

2025-03-21 11:57:00
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-21 12:22:02
news-image

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்...

2025-03-21 12:24:26
news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19
news-image

இலங்கைக்கு தீயணைப்பு வாகனங்களை வழங்க ஜப்பான்...

2025-03-21 12:22:41