பொலிவியாவில் மலைப்பாங்கான பகுதியில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பொலிவியாவில் தென்மேற்கு மாவட்டமான யோகல்லாவில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் சுமார் 2,625 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதோடு, நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிவியாவில் மலைப்பாங்கான பகுதிகளில் ஆபத்தான வீதிகள் உள்ளன.
இந்த விபத்து Potosí மற்றும் Oruro நகரங்களுக்கு இடையே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ் அதிவேகமாக சென்றதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த ஆண்டில் இதுவரை தென் அமெரிக்க நாட்டில் பதிவாகியுள்ள கோர விபத்து இதுவாகும்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக யுனிடெல் உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொலிவியாவில் கோர விபத்துக்கள் இடம்பெறுவது வழமையான விடயமாக மாறியுள்ளது.
கடந்த மாதம், போடோசி அருகே இடம்பெற்ற பஸ் விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
பொலிவியாவில் சுமார் 12 மில்லியன் மக்கள் வாழ்கின்ற நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1,400 பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர் என அந்நாட்டு அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM