அத்துமீறிய இந்திய இழுவை மடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையை சீனா தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுவதற்காக எம்மை பயன்படுத்த இடமளிக்க மாட்டோம் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாஜத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் சீன தூதரக அதிகாரிகளை எமது கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்தோம்.
கொரோனா காலங்களிலும் இந்திய இழுவைப் படகுகளினால் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டபோதும் எமது மக்களுக்கு பல்வேறு உதவிகளை சீன அரசாங்கம் செய்தது. அவர்கள் செய்த உதவிக்கு இந்த சந்திப்பின்போது நன்றி தெரிவித்தோம்.
அத்துடன், இந்திய இழுவை மடிப் படகுகளால் பாதிக்கப்பட்டு வரும் எமது மீனவர்களுக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம்.
இந்திய அரசிடமும் இதே கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். யார் எமது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினாலும் அதை நாம் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
அத்துமீறிய இந்திய இழுவை மடிப் படகுகளால் தொடர்ச்சியாக நாம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சீனா எமக்கு உதவி செய்வதாக கூறி, எமது கடல் பிராந்தியத்தால் இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுவதற்காக எம்மை பயன்படுத்த எதிர்பார்த்தால், அதற்கு இடமளிக்க முடியாது.
இந்தியா எமது அயல் நாடு. அது மாத்திரமல்ல, எமது தொப்புள்கொடி உறவு என்ற ரீதியில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்க, எமது கடற்பரப்பை பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM