(எம்.மனோசித்ரா)
புதிய தாராளமய பொருளாதார திட்டத்தை மேலும் முன்னேற்றுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது முதலாவது வரவு - செலவு திட்டத்தில் எடுத்துள்ள அணுகுமுறையைப் பாராட்டுவதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரவு - செலவு திட்டம் தேசிய மக்கள் சக்தியால் இதற்கு முன்னர் கூறப்பட்டவற்றுக்கு முரணானதாகவே காணப்படுகிறது.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பொன்னான வாய்ப்புகளை நாசமாக்கிய விரோதமான மற்றும் பாசாங்குத்தனமான அரசியல் கொள்கைகளுக்குப் பதிலாக, புதிய தாராளமய சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பொருளாதாரத் திட்டத்துடன் ஒரு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை கட்டமைப்பிற்குள் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு பட்ஜெட்டாகும், மேலும் இது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எமது முந்தைய அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளின் தொடர்ச்சியான நீட்டிப்பாகும்.
தற்போதைய ஜனாதிபதி நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் என்று கூறினாலும், அந்த நிலைக்கு இட்டுச் சென்ற உண்மையான உரிமையாளர்கள் எமது அரசாங்கம்தான். இதனை எவராலும் மறுக்க முடியாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM