(எம்.நியூட்டன்)
யாழ். மாவட்டத்தில் உள்ள வீதிகளின் முழுமையான விபரங்கள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தயாரிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு கையளிக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்துக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை நடத்தியபோது யாழ். மாவட்டத்துக்கு வீதிகளை புனரமைக்க எவ்வளவு நிதி தேவை, எத்தனை கிலோ மீற்றர் தூர வீதிகள் புனரமைக்கப்படவேண்டும் என்ற கேள்விகளை கேட்டபோது அதற்கு முறையான பதில்களை அரசாங்க அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை.
மேலும், யாழ். மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழுவின் மீளாய்வு கூட்டம் நடை பெற்றபோதும் அமைச்சர் சந்திரசேகரனால் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
குறிப்பாக, யாழ். மாவட்டத்தில் கிராமங்களின் தேவைப்பாடுகள், வீதிகளின் விபரங்கள், வீட்டுத்திட்டங்கள், மக்களுக்கான தேவைகள் தொடர்பில் ஒவ்வொரு பிரதேச செயலகங்கள், கிராமங்களின் விபரங்கள் பெறப்பட்டு பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகத்திலும் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் மாவட்டத்துக்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கும்போது அல்லது விபரங்கள் யாரும் கேட்கின்றபோது அவற்றை வழங்குவதன் மூலம் மாவட்டத்தின் அபிவிருத்தியை துரிதப்படுத்த முடியும்.
எனவே, இந்த விடயத்தில் அதிகாரிகள் கூடிய கவனமெடுத்து அதற்கேற்ப துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த விடயங்கள் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகையில், மாவட்டத்தின் பிரதேச செயலர்களை அழைத்து கலந்துரையாடி, வீதி அபிவிருத்தி திணைக்கள வீதிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதிகள், மாகாண சபை உள்ளூராட்சி சபை வீதிகள் பற்றிய முழுமையான விபரங்களை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய வீதிகளின் விபரங்கள் அடையாளப்படுத்தப்பட்டு மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் கையளிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM