மியன்மாரில் 116 பேருடன் பரந்த இராணுவ விமானம், தொடர்பு எல்லையிலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரின் இராணுவத்திற்கு சொந்தமான விமானத்தில், 116 பேருடன் யாங்கோன் பிராந்தியத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், மேக் பகுதியில் வைத்து ராடார் தொடர்பிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும், விமானத்தை தொடர்புகொள்ள தரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் பயன் கிட்டவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

குறித்த விமானத்தில் 105 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் இருந்ததாக மியன்மார் இராணுவ விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் காணாமல்போன விமானத்தை தேடும் பணியில் விமானப்படை மாற்று இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.