யூடியூப்பில் ஒழிப்பரப்பாகும் “இந்தியா காட் லேடன்ட்” எனும் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து மிகவும் இழிவாக கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும் பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு எதிராக மேலும் பொலிஸார் வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியா நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இதனை கருத்தில் கொண்ட நீதிபதி "அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் உயிரை பாதுகாத்துகொள்ளவதற்கு” மகாராஷ்டிரா அல்லது அசாம் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களை அணுக யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
ஜெய்ப்பூரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியா கைது செய்யப்பட மாட்டார் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியா தனது கடவுச்சீட்டை மகாராஷ்டிரா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM