பாகிஸ்தான் கடற்படையால் ஒன்பதாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட AMAN-2025 பலதரப்பு பயிற்சியில் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பலானது, குறித்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று திங்கட்கிழமை (17) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இதன்போது, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுப்படி விஜயபாகு கப்பலை வரவேற்றனர்.
பிராந்திய ஒத்துழைப்பு, ஸ்தீரத்தன்மை மற்றும் இயங்குநிலையை மேம்படுத்துவதற்கும், கடல்சார் பயங்கரவாதம் மற்றும் கடற்கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு கூட்டாக பதிலளிக்கும் நோக்கத்துடன் “அமான்” பலதரப்பு பயிற்சி பாகிஸ்தான் கடற்படையால் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, 2025 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை பாகிஸ்தானின் தலைநகரான கராச்சி மற்றும் அரபிக்கடலை மையமாக கொண்டு நடைபெற்ற அமான்-2025 பலதரப்பு பயிற்சியில் 11 மாநிலங்களைச் சேர்ந்த 22 போர்க்கப்பல்கள், 02 நீர்மூழ்கிக் கப்பல்களுடன் விமானங்களும் இணைந்தன.
AMAN-2025 பலதரப்பு பயிற்சியானது Harbour phase மற்றும் Sea phase என இரண்டு கட்டங்களாக நடைபெற்றதுடன், இதில் கடல் பாதுகாப்பு பயிற்சிகள், மனிதாபிமான நிவாரணப் பயிற்சிகள், கடற்கொள்ளைகளுக்கு எதிராக பதிலளித்தல், போர் அமைப்புகளில் நகர்தல், துப்பாக்கி சூட்டு பயிற்சிகள் மற்றும் பல கடற்படை பயிற்சிகளுக்கு விஜயபாகு கப்பல் பங்கேற்றது.
இவ் பயிற்சியின் முடிவைக் குறிக்கும் வகையில் International Fleet Review ஐ தொடர்ந்து, ஒன்பதாவது அமான் 2025 பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்தது.
2025 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இந்த பயிற்சியுடன் நடைபெற்ற AMAN Dialogue 2025 கடற்படை மாநாட்டில், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க இலங்கை கடற்படையின் பிரதிநிதியாக கலந்துகொண்டார்.
அமான் கடற்படை உச்ச மாநாட்டுடன் இணைந்த ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க மற்றும் பாகிஸ்தான் கடற்படையின் கடற்படைத் தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரப் (Chief of the Naval Staff of Pakistan Navy Admiral Admiral Naveed Ashraf)ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பும் இடம்பெற்றதுடன்,இலங்கை கடற்படைக் கப்பலான விஜயபாஹுவின் கண்காணிப்புப் பயணத்திலும் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி ஈடுபட்டார், அங்கு விஜயபாகு கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் பாகிஸ்தான் கடற்படைத் தளபதிக்கு இடையில் நினைவு பரிசுகளும் பரிமாற்றி கொள்ளப்பட்டன.
மேலும், இப்பயிற்சியுடன் இணைந்து நடாத்தப்பட்ட கலாசார பரிமாற்ற நிகழ்ச்சிக்காக கடற்படையின் இசைப் பிரிவினரால் பல கலாசார நிகழ்வுகள் முன்வைக்கப்பட்டதுடன், அங்கு நடைபெற்ற உள்ளூர் உணவுக் கண்காட்சிக்கு விஜயபாகு கப்பலும் பங்களித்தது.
மேலும், பயிற்சியில் பங்கேற்ற கப்பல்களின் செயல்பாட்டு செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை கண்காணிப்பதற்காக பாகிஸ்தான் கடற்படை கப்பல் சுற்றுப்பயண நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததுடன், பயிற்சியில் பங்கேற்ற விஜயபாகு கப்பலின் பணியாளர்கள் பிராந்திய மற்றும் பிராந்திய சாராத கடற்படைகளின் திறன்கள் தொடர்பான புதிய அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கும் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது.
பிராந்திய மற்றும் பிராந்திய சாராத கடற்படைகள் பங்குபற்றிய இந்தப் பல்தரப்பு கடல்சார் பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம், பிராந்திய கடற்படைகளுடன் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பான புதிய அறிவு, உத்திகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்தல், புதிய சவால்களை அடையாளம் காணுதல், கூட்டாக அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவது போன்ற பல நன்மைகள் இதன் மூலம் ஏற்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM