சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை திறப்பு விழா 

18 Feb, 2025 | 01:02 PM
image

(எம்.நியூட்டன்)

சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கனகராசா சிறிமோகனனால் திறந்து வைக்கப்பட்டது.

சுழிபுரம் மேற்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் தலைவர் வடிவேலு கோகுலநேசன் தலைமையில் இத்திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுழிபுரம் கலைமகள் சனசமூக நிலையத்தின் 50 வயதுக்கு மேற்பட்ட சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், சனசமூக நிலையத்துக்கான சந்தா பணத்தினை செலுத்தும் அங்கத்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக குலுக்கல் சீட்டின் மூலம் தெரிவுசெய்யப்பட்டு கிராமத்தில் பொருளாதார நிலையில் நலிவடைந்த மாணவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.

பாடசாலை திறப்பு விழாவில் கலைமகள் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள், பொன்னாலை சந்திர பரத கலாலயத்தின் திருமுறை ஆடல் நாட்டியம், அளவையூர் கலைவானி வில்லிசை குழுவின் திரு நீலகண்டர் வரலாறு வில்லிசை, சண் நாடக குழுவினரின் “முட்டை” நகைச்சுவை நாடகம் ஆகியவை நிகழ்த்தப்பட்டன.

அதனை தொடர்ந்து விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஷ

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கனகராசா சிறிமோகனன், சிறப்பு விருந்தினராக சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார், கௌரவ விருந்தினர்களாக யாழ். மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் சுப்பிரமணியம் உதயபாலன், வலி. மேற்கு பிரதேச சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயரட்ணம் ஜெயராஜன், சுழிபுரம் மேற்கு சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், அறநெறி பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சுழிபுரம் மேற்கைச் சேர்ந்த புலம்பெயர் தேச உறவுகள் மற்றும் கிராமத்தவர்களின் நிதிப் பங்களிப்புடன் இந்த அறநெறிப் பாடசாலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'நூறு மலர்கள் மலரட்டும்' : கோண்டாவில்...

2025-03-25 19:01:18
news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04