ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராக மறைந்த மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி திகழ்ந்தவர் என சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி பிறந்த மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி கடந்த 16 ஆம் திகதி தனது 70 ஆவது வயதில் அநுராதபுரத்தில் காலாமானார்.
சீதா ரஞ்சனி துணிச்சலான ஊடகவியலாளர், ஊடக உரிமைக்கு குரல் கொடுத்தவர், எழுத்தாளர், பாடலாசிரியர், பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் என்ற பன்முக ஆளுமை கொண்டு விளங்கியவர்.
வாழ்நாள் முவழுவதும் ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக போராடிய சீதா ரஞ்சனி, ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராகவும், ஊடக ஒடுக்குமுறைக்கு எதிராக உறுதியாகக் குரல் கொடுத்தவர்.
ஊடகத்துறையில் பல தாசப்தங்களாக பணியாற்றி இவர், ஊடக நெறிமுறைகள், பாலின சமத்துவம், ஒதுக்கப்பட்ட மற்றும் நலிவான சமூகங்களின் உரிமைகள் மற்றும் இலங்கையில் சுதந்திரமான, சுயாதீனமான ஊடகங்களை நிலைநாட்ட போராடியவர்.
சுதந்திர ஊடக இயக்கத்தின் (FMM) ஸ்தாபக உறுப்பினராகவும், தலைமைத்துவத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
2015, 2016, 2020, 2021 ஆண்டுகளில் ஒருங்கிணைப்பாளராகவும், பலமுறை செயலாளராகவும் சுதந்திர ஊடக இயக்கத்தில் பணியாற்றினார். அவர் முதன்மை அமைப்புகளின் முன்னணி ஆட்சிக் குழுவின் உறுப்பினராக, ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவும் உதவினார்.
நீண்டகால நிர்வாகக் குழு உறுப்பினரான சீதா ரஞ்சனி, ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கவும் ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டவும் சுதந்திர ஊடக அமைப்பின் பணியை நிறைவேற்ற உதவினார்.
சீதா, தேர்தல் வன்முறைகைளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (CMEV) துணை ஒருங்கிணைப்பாளராகவும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (Sri Lanka Press Institute) மற்றும் தெற்காசிய சுதந்திர ஊடக சங்கத்தின் (SAFMA) நிர்வாக உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
சுயாதீன எழுத்தாளர், ஆசிரியர், ஆய்வாளர் மற்றும் பயிற்சியாளராக ஊடகத்துறையில் பல தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கினார். உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நெறிமுறையுடன் அறிக்கையிடலை நிலைநிறுத்த அவர்களை ஊக்கப்படுத்தினார்.
யுக்திய என்ற மாற்றுப் பத்திரிகையில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார், மேலும் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பில் நீண்டகால உறுப்பினராக இருந்தார், அங்கு அவர் அதன் வெளியீடான 'அவளை” (ඇය/Aeya) ஆசிரியராகப் பணியாற்றினார், ஊடகங்களில் பெண்களின் குரல்களை வலுப்படுத்தினார்.
இலங்கையில் தெற்காசியப் பெண்களுக்கான ஊடக அமைப்பின் ஸ்தாபக உறுப்பினராகவும் இருந்தார், இலங்கையிலும் பிராந்தியத்திலும் பெண் ஊடகவியலாளர்களின் வலுவான வலையமைப்பைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகித்தார்.
சமூக செயற்பாட்டாளரான சீதா ரஞ்சனி, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் அன்னையரும் புதல்வியரும் அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.
ஊடகத்துறை மற்றும் சமூக செயற்பாடுகளுக்கு அப்பால் இவர் ஒரு திறமையான எழுத்தாளரும், பாடலாசிரியரும் ஆவார், பல இதயபூர்வமான பாடல்களை எழுதி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
அவரது கலைப்பணி அதே நம்பிக்கையையும் ஆர்வத்தையும் கொண்டிருந்தது, அது அவரது செயல்பாட்டை வரையறுத்தது, ஊடகங்கள் மற்றும் கலை இரண்டிலும் அவரை ஒரு செல்வாக்குமிக்க குரலாக மாற்றியது.
இவர் தன்னுடைய வாழ்க்கையை ஊடகத்துறை மற்றும் சமூக அபிவிருத்திக்கு அர்ப்பணித்தார்.
இலங்கையின் ஊடகத்துறைக்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற சேவையை கௌரவிக்கும் வகையில், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் 24 ஆவது தடவையாக நடத்திய சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வில், “ஆய்வு மற்றும் சமூக மேம்பாட்டிற்கான பங்களிப்பிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM