ஐரோப்பிய செய்தித்தாள்கள் உக்ரைன் தொடர்பில் பாரிசில் இடம்பெற்ற ஐரோப்பிய தலைவர்களின் அவசர சந்திப்பிற்கு முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிட்டுள்ளதுடன், டிரம்ப் புட்டின் அச்சிற்கு ஐரோப்பா சவால் விடுவதாக தெரிவித்துள்ளன.
உக்ரைன் யுத்த நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா ஐரோப்பாவிற்கு இடமளிக்காததை தொடர்ந்து பாரிசில் இடம்பெற்ற ஐரோப்பிய தலைவர்களின் அவசர சந்திப்பிற்கு ஐரோப்பிய நாள் இதழ்கள் முக்கியத்துவம் வழங்கியுள்ளன.
உக்ரைன் தொடர்பில் இன்று சவுதிஅரேபியாவில் அமெரிக்க ரஸ்ய அதிகாரிகள் சந்திப்பதற்கு முன்னர் நேற்று ஐரோப்பிய தலைவர்களின் அவசர சந்திப்பு இடம்பெற்றது.
எனினும் ஐரோப்பிய தலைவர்களின் சந்திப்பு எந்த இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளது. உக்ரைனிற்கு ஐரோப்பிய அமைதிப்படையை அனுப்பும் விடயத்திலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
'டிரம்ப் அதிர்ச்சியில் ஐரோப்பா" என ஜேர்மனியின் ஹன்டெல்ஸ்பிளட் தெரிவித்துள்ளது.அமெரிக்காவையும் ரஸ்யாவையும் கையாள்வதற்கான பொதுவான மூலோபாயத்தை கண்டுபிடிப்பதற்கு ஐரோப்பியர்கள் முயற்சி செய்தாலும், முக்கிய கேள்விகள் குறித்து கருத்துடன்பாடு இல்லை என அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
உக்ரைனிற்கு அமைதிப்படையை அனுப்;புவது குறித்து பேச்சுவார்த்தைகள் என தலைப்பிட்டுள்ள Süddeutsche Zeitungஇத்தகைய விவாதம் எரிச்சலூட்டுவது,முன்கூட்டியே இடம்பெறுவது என ஜேர்மன் சான்சிலர் தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டுள்ளது.
பிரான்சின்Le Monde l ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால் விடுக்கின்றது என தெரிவித்துள்ளதுடன் ,ஜெலென்ஸ்கியின் பெரும்தனிமை என்ற செய்தியையும் வெளியி;ட்டுள்ளதுடன் அமெரிக்காவின் சதிப்புரட்சி எப்படி உக்ரைன் ஜனாதிபதியை பலவீனப்படுத்தியுள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் - ஐரோப்பா மீண்டும் போராடுகின்றது என செய்தி வெளியிட்டுள்ள லிபரேசன்,சவுதிஅரேபியாவில் இன்று இடம்பெறவுள்ள அமெரிக்க ரஸ்ய அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய தலைவர்களிற்கு இடமளிக்கப்படவில்லை , இதன் காரணமாக உக்ரைனிற்கான தங்கள் சொந்த திட்டத்தை உருவாக்குவதற்காக ஐரோப்பிய தலைவர்கள் ; பாரிசில் சந்தித்தனர் என தெரிவித்துள்ளது.
ஸ்டார்மெர்: எதிர்காலத்தில் உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல்களை தடுப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவு அவசியம் பிரிட்டனின் கார்டியன் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஸ் பிரதமரின் கருத்தே இது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் சந்திப்பில் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்கவேண்டும் என ஐரோப்பிய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என கார்டியன் தெரிவித்துள்ளது.
ஜேர்மனி உக்ரைனிற்கான அமைதி திட்டத்தை நிராகரித்துள்ளது என டெய்லி டெலிகிராவ் தெரிவித்துள்ளது.'
ஸ்டார்ம் தாக்குதல் என தலைப்பிட்டுள்ள மெட்ரோ ரஸ்யாவை முறியடிப்பதற்கான வரலாற்றில் ஒரு தடவை சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதற்கான நடவடிக்கையில் பிரிட்டிஸ் பிரதமர் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
பலத்தின் சோதனை என தெரிவித்துள்ள டெய்லிமிரர் டிரம்ப் பிரி;ட்டிஸ் பிரதமரின் படங்களை முன்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM