நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும் இலங்கை மகளிர் குழாத்தில் 19 வயதுக்குட்பட்ட வீராங்கனைகள் இருவர்!

18 Feb, 2025 | 12:14 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு சமரி அத்தபத்து தலைமையில் 16 வீராங்கனைகளைக் கொண்ட பலம்வாய்ந்த இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை மகளிர் குழாத்தில் 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவியாக விளையாடிய மனுதி நாணயக்கார, உதவித் தலைவியாக விளையாடிய ரஷ்மிக்கா செவ்வந்தி ஆகியோரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

துபாயில் கடந்த வருடம் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இலங்கை மகளிர் அணியினர் அதன் பின்னர் விளையாடவுள்ள முதலாவது சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இவையாகும்.

நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் மார்ச் 4ஆம் திகதியும் இரண்டாம், மூன்றாம் போட்டிகள் நெல்சன் செக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் 7, 9ஆம் திகதிகளிலும் முதல் இரண்டு மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகள் க்றைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் மைதானத்தில் மார்ச் 14, 16 ஆம் திகதிகளிலும் கடைசிப் போட்டி டனேடின் பல்கலைக்கழக மைதானத்தில் 18ஆம் திகதியும் நடைபெறும்.

இலங்கை மகளிர் அணியினர் எதிர்வரும் 22ஆம் திகதி இங்கிருந்து நியூஸிலாந்து நோக்கி பயணமாகவுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கு முன்னர்லின்கன் பிஎஸ்ஓ மைதானத்தில் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் பெப்ரவரி 27, 28ஆம் திகதிகளில் இலங்கை அணியினர் விளையாடவுள்ளனர்.

இலங்கை மகளிர் குழாம்

சமரி அத்தபத்து (தலைவி), ஹர்ஷித்தா சமரவிக்ரம, விஷ்மி குணரட்ன, நிலக்ஷி டி சில்வா, காவிஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, மனுதி நாணயக்கார, இமேஷா துலானி, அச்சினி குலசூரிய, உதேஷிக்கா ப்ரபோதனி, சச்சினி நிசன்சலா, கௌஷினி நுத்யங்கனா, இனோஷி பெர்னாண்டோ, சுகந்திகா குமாரி, ரஷ்மிக்கா செவ்வந்தி, சேத்தனா விமுக்தி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36