துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் : மாயமான துப்பாக்கியுடன் ஒருவர் கைது

18 Feb, 2025 | 12:26 PM
image

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது துப்பாக்கியுடன் காணாமல்போயிருந்த நிலையில் கடந்த 08 ஆம் திகதி துபாய்க்கு தப்பிச் சென்றிருந்தார்.

இந்நிலையில், காணாமல்போன துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கே. புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், 

கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து, துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கியும் 30 தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை (18) நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16
news-image

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2025-03-21 13:00:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது...

2025-03-21 13:10:21
news-image

நாட்டை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கைகளுக்கு...

2025-03-21 13:09:27
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் ;...

2025-03-21 11:57:00
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-21 12:22:02
news-image

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்...

2025-03-21 12:24:26
news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19
news-image

இலங்கைக்கு தீயணைப்பு வாகனங்களை வழங்க ஜப்பான்...

2025-03-21 12:22:41
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு -  6...

2025-03-21 12:08:17
news-image

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் !

2025-03-21 11:51:15
news-image

வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து :...

2025-03-21 11:31:24