அவிசாவளை - புவக்பிட்டிய, எல்ஸ்டன் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள சத்குரு சீரடி சாயி பாபா ஆசிரமம், தியான மற்றும் சமூக சேவை மையம் நூதன பிரதிஷ்டை செய்யப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது.
இலங்கையிலேயே, சீரடி சாயி பாபாவின் நாமத்தில் மிகப் பிரம்மாண்டமாக கட்டியெழுப்பப்பட்ட ஆலயம், ஆசிரமம், சமூக சேவை மையமாக விளங்குவது அவிசாவளை புவக்பிட்டிய நகரில், எல்ஸ்டன் தோட்டத்தில் அமைந்துள்ள சத்குரு சீரடி சாயி பாபா ஆலயமாகும்.
அந்த ஆலயத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி காலை 5 மணி முதல் கிரியைகள் ஆரம்பமாகி, மறுநாள் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு புனித பிரதிஷ்டையும் ஆலய திறப்பு நிகழ்வும் நடைபெறும்.
சிறப்பு ஹோமாதிகள் மற்றும் பூஜைக் கிரியைகள், பிரம்ம இலக்ஷ்மிகாந்த ஜெகதீசக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளன.
இப்புனித பிரதிஷ்டை செய்வதற்காக உலக சாய் அறக்கட்டளையின் ஸ்தாபகரும் சீரடி சாயியின் புகழை உலகெங்கும் கொண்டுசெல்லும் குரு, டாக்டர். சந்திரபானு சத்பதி வட இந்தியாவிலிருந்து வருகை தரவுள்ளார்.
அத்துடன், சத்ய சாயி பாபாவின் நேரடி ஆசி பெற்ற கஜல் பாடகர் ஸ்ரீ ரவிராஜ் நசேரி மும்பையிலிருந்து சிறப்பு பஜனையில் பங்கேற்கவுள்ளார்.
இந்த விசேட நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அறங்காவல் சபையினர் சீரடி சாயி பாபா பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM