வரவு - செலவுத் திட்ட வரலாற்றில் கல்விக்கு அதிக தொகை ஒதுக்கீடு

Published By: Digital Desk 2

18 Feb, 2025 | 02:03 PM
image

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நிதியமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று  திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கல்விக்கு வரலாற்றில் அதிக தொகை இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் பின்வருமாறு.

  • முன்பள்ளி சிறார்களின் போசனையை அதிகரிக்க, காலை உணவு வழங்குவதற்காக ஒரு வேலை உணவுக்கு வழங்கப்படும் 60 ரூபாவினை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அதற்காக 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

  • தெரிவுசெய்யப்பட்ட ஆரம்பகால சிறு பராய அபிவிருத்தி நிலையங்களின் அபிவிருத்திக்காக ரூ.80 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

  • முன்பள்ளி ஆசிரியர்களின் சேவைகளுக்காக தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 1000 ரூபாவினால் அதிகரிக்க 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

  • பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாயும் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக 135 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் முன்மொழியப்பட்டது.

  • தற்போதுள்ள பாடசாலை முறைமையை மீளாய்வு செய்து தேசிய திட்டமொன்றை தயாரிப்பதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

  • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை 750 ரூபாயில் இருந்து 1500 ரூபா வரையில் அதிகரிக்க 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

  • விளையாட்டுத் துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மேலதிக உணவு உதவித்தொகை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தவும், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகையை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரிக்கவும் ரூ. 200 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டது.

  • பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல உதவித்தொகையை ரூபா 5,000 இலிருந்து ரூபா 7,500 ஆக அதிகரிக்கவும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாணவர் உதவித் தொகையை ரூபா 4,000 இலிருந்து ரூபா 6,500 ஆக அதிகரிக்கவும் 4,600 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

  • உயர்தர பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக திறமையானவர்களுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்கத் தேவையான ஏற்பாடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க 200 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

  • யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள நூலகங்களை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

  • ஐந்து மாகாணங்களில் விசேட விளையாட்டுப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை...

2025-03-23 12:50:49
news-image

இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு...

2025-03-23 12:38:36
news-image

வெடிமருந்து, உள்நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது...

2025-03-23 12:44:52
news-image

வட கொழும்பு தொகுதி கொட்டாஞ்சேனை மேற்கில்...

2025-03-23 12:38:35