(க.கமலநாதன்)

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிப்புற்றுள்ள தெற்கு மக்களிற்கு நிவாரணங்கள் வழங்கும் நோக்குடன் யாழ் மாவட்ட மக்களால் சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் நாளை கையளிக்கப்படவுள்ளது. 

வடக்கு மற்றும் தெற்கு மக்களிடையே சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்பின் ஒரு அங்கமாகவே மேற்படி நிகழ்வு  முன்னெடுக்கப்படுகின்றது. 

வழங்கப்பட்ட அனைத்து பொருட்களும் களுத்தரை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புற்றுள்ள மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கப்பற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.