( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் ( விசேட ஏற்பாடுகள் ) சட்டமூலம் 187 வாக்குகளுடன் திருத்தங்கள் ஏதுமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை.
உள்ளூராட்சி மன்றத் அதிகாரசபைகள் தேர்தல்கள் ( விசேட ஏற்பாடுகள்) தொடர்பான சட்டமூலத்தை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்திம அபேரத்ன, முதலாம் வாசிப்புக்காக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சபைக்கு சமர்ப்பித்தால்.
குறித்த சில உள்ளூர் அதிகார சபைகளின் தேர்தல்கள் கோரப்பட்டு பிற்போடப்பட்டுள்ளவிடத்துஇ அத்தகைய உள்ளூர் அதிகாரசபைகள் தொடர்பில் புதிய நியமனப்பத்திரங்களைக் கோருவதற்காகவும், தேர்தல்களை நடாத்துவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அதனோடு தொடர்புப்பட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்காக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் ( விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் நான்கு அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவிப்பதற்காக பாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (14) கூடியது.இதன்போது சபாநாயகர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவித்தார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் ' சட்டமூலம் முழுமையாகவும் மற்றும் குறிப்பாக 2 மற்றும் 3 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதியரசர்கள் குழாமில் பெரும்பான்மையினராகிய இரண்டு நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
நீதியரசர் குழாமில் மீதமுள்ள ஒரு நீதியரசர், சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படவில்லையென்பதால் அதனைப் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையொன்றினால் நிறைவேற்ற முடியும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று பி.ப.2 மணிமுதல் பி.ப 7 மணி வரை நடைபெற்றது. அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ வாக்கெடுப்பு கோரினார்.
இதனைத்தொடர்ந்து வாக்கெடுப்பு கோரப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 187 வாக்குகள் அளிக்கப்பட்டு ஏகமனதாக திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM