நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று ஜனாதிபதி உட்பட அரசாங்கம் மாறியுள்ளது - சஜித் பிரேமதாச

17 Feb, 2025 | 09:37 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியம் விதித்த கட்டுப்பாட்டுக்குள் இருந்து தயாரிக்கப்பட்ட வரவு -  செலவுத் திட்டத்தையே ஜனாதிபதி முன்வைத்துள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திங்கட்கிழமை (17) ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்ட உரையை தொடர்ந்து  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நாடு அநுரவுக்கு என்ற கொள்கைப் பிரகடனத்துக்கமைய பெரிய கேக் ஒன்றை தயாரிப்பதாகவே உறுதியளிக்கப்பட்டது. ஆனால், வரவு - செலவுத் திட்ட உரையை பார்க்கும்போது  நாடு அநுரவுக்கு அல்ல 'ஐ.எம்.எப்'க்கு என்பது போன்றே இருக்கிறது. 

அதாவது சர்வதேச நாணய நிதியம் விதித்த கட்டுப்பாட்டுக்குள் தயாரிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டமாகவே இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரல்கள் இதில் உள்ளன. அதன்படி மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களே முதலீட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதித்தின் நிபந்தனைக்குள் இருக்கிறார். அவர்கள் கூறிய நிலைபேறான பொருளாதாரம் இந்த வரவு - செலவுத் திட்டத்தில் இல்லை. 

இதனால் திருத்தங்களை முன்வைக்கும்போது திருத்தங்களை மேற்கொண்டு, மக்களுக்கு வாக்குறுதி அளித்த பிரகாரம் சௌபாக்கியமான நாடு என்ற கொள்கைப் பிரகடனத்தை செயற்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் நாடு அநுரவுக்கு என்று கூறிக்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஏற்றவாறு ஆடும் பயணமாகவே தெரிகிறது. 

இவர்கள் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் மாறியுள்ளது. இது கவலைக்குரிய விடயமாகும். பெற்ற மக்கள் ஆணையை முழுமையாக மீறுவதாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25