அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

17 Feb, 2025 | 05:27 PM
image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி - கொழும்பு பிரதான வீதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் உட்பட இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை அடையாளம் கண்டுள்ளனர்.

சந்தேக நபர் காலி, படபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் “வெல்லகே சமத்” என்பவர் ஆவார். 

எவ்வாறிருப்பினும், சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பொலிஸார் சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். 

இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் - 071 8591484 

எல்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு - 091 2291095 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28
news-image

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி....

2025-03-15 18:52:01
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இளைஞன்...

2025-03-15 16:56:03
news-image

21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன்...

2025-03-15 16:43:26