'அமரன்' எனும் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு தமிழின் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் சிவ கார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு, 'மதராஸி' என பெயரிடப்பட்டு, அதற்குரிய பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னணி நட்சத்திர இயக்குநரான ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ' மதராஸி' எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜாம்வால், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுதீப் இலாமோன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு 'மதராஸி ' திரைப்படத்தின் பிரத்யேக அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளியில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள், பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெரும் என்ற எதிர்பார்ப்பு திரையுலக வணிகர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் 'மதராஸி' படத்தின் காணொளியை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM