எம்மில் சிலருக்கு திடீரென்று சிறுநீர் வெளியேறுவதில் அசௌகரியமும் கடின தன்மையும் ஏற்படும். இதனால் அவர்கள் விவரிக்க இயலாத சிரமங்களை எதிர் கொள்வார்கள். இந்த தருணத்தில் வைத்தியர்கள் பரிசோதனை செய்து சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாய் பகுதியில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதற்காக லேப்ராஸ்கோபிக் பைலோபிளாஸ்ரி எனும் நவீன சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வார்கள்.
எம்மில் சிலருக்கு சிறுநீர் வெளியேறுவதில் பாதிப்பு ஏற்படும். இவை தற்காலிகமாகவும் , நிரந்தரமாகவும் ஏற்படலாம். சிலருக்கு இத்தகைய தருணத்தில் சிறுநீர் வெளியேற்றம் மிக சிறிய அளவிலும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை பெறாவிட்டால் சிறுநீரக கல், தொற்று பாதிப்பு, உயர் குருதி அழுத்த பாதிப்பு , சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பு போன்ற பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
இத்தகைய பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் பிரத்யேக பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். அதாவது சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் பைக்கு சிறுநீரக குழாய் வழியாக சிறுநீர் வந்தடைந்து, அவை சிறுநீர் பாதை வழியாக வெளியேறும்.
இந்த தருணத்தில் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் பைக்கு வருகை தரும் சிறுநீர் குழாயில் அடைப்பு பாதிப்பு அல்லது அந்த குழாய் சுருக்கம் அல்லது பலவீனம் போன்ற பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு லேப்ராஸ்கோபிக் பைலோபிளாஸ்ரி எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்கலாம். இத்தகைய நவீன லேப்ராஸ்கோபிக் சிகிச்சை மூலம் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் வெளியேற்றம் சிறுநீர் குழாய் வழியாக தங்கு தடையின்றி சிறுநீர்ப்பை பைக்கு வந்தடையும் வகையில் சீரமைக்கப்படுகிறது. இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு நோயாளியுடைய சிறுநீர் வெளியேற்றம் சீராக இருக்கும். இதன் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாகப் பின்பற்றினால் பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தடுக்க இயலும்.
வைத்தியர் குரு பாலாஜி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM