களுத்துறை, அங்குருவாதொட்ட , அக்குருகலவிட பிரதேசத்தில் உள்ள தேவாலயத்திலிருந்த தங்க முலாம் பூசப்பட்ட சிலை ஒன்றை திருடியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
சிலையை திருடிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் வாகனமும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் குறித்த தேவாலயத்தில் பணிபுரியும் பூசாரியின் நெருங்கிய நண்பன் ஒருவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவத்தன்று, சந்தேக நபர்கள் இருவரும் தேவாலயத்தில் உள்ள இயந்திரம் ஒன்றை பழுது பார்ப்பதற்காகத் தேவாலயத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது பூசாரி தேவாலயத்தை விட்டு வெளியே சென்றுள்ள நிலையில் சந்தேக நபர்கள் இருவரும் சிலையை திருடி ஜீப் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM