மொரீசியஸில் புதிய நவீன புற்றுநோய் மருத்துவமனையில் முதல் அறுவைச் சிகிச்சையை செய்த சென்னை பேராசிரியர் பாலாஜி

17 Feb, 2025 | 04:08 PM
image

மொரீசியஸ் நாட்டில் புதிதாகத் திறக்கப்பட்ட நவீன புற்றுநோய் மருத்துவமனையில் நடந்த முதல் அறுவைச் சிகிச்சையான நாக்கு புற்றுநோய் அறுவைச் சிகிச்சையை சென்னையைச் சேர்ந்த பாலாஜி பல் மற்றும் முகச்சிரமைப்பு மருத்துவமனையின் நிருவாக இயக்குநரும் உலகப்புகழ்பெற்ற முகச்சீரமைப்பு அறுவைச் சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் டாக்டர் எஸ்.எம். பாலாஜி செய்து முடித்தார்.

அந்த மருத்துவமனையை மொரீசியஸின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் குமார் பட்சு பெப்ரவரி 4 ஆம் திகதி திறந்துவைத்தார். அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துமுடித்த பேராசிரியர் பாலாஜியை மொரீசியஸ் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

பிரதமருடனான சந்திப்பின்போது மொரீசியஸில் பல்,வாய் , முகம், மற்றும் கபால மறுசீரமைப்பு திட்டங்களை மேம்படுத்தியதற்காக அவருக்கு  பேராசிரியர் பாலாஜி நன்றி தெரிவித்தார்.

மொரீசியஸின் விக்டோரியா மருத்துவமனையின் கௌரவ முகச்சீரமைப்பு அறுவைச் சிகிச்சை நிபுணராக பேராசிரியர் பாலாஜியை பிரதமர் ராம்கூலம் நியமித்த பிறகு கடந்த 13 வருடங்களாக அவர் அந்த நாட்டில் சேவையாற்றிவருகிறார்.

பேராசிரியர் பாலாஜி வருடத்துக்கு இரண்டு மூன்று தடவைகள் மொரீசியஸுக்குச் சென்று ஒவ்வொரு தடவையும் 12 முதல் 15 முகச்சீரமைப்பு அறுவைச் சிகிச்சைகள் வரை செய்து அரசின் சுகாதாரத்துறை மூலம் மொரிசியஸ் நாட்டு மக்களுக்கு வெற்றிகரமாகச் சேவை செய்துவருகிறார்.

லண்டனில் மருத்துவப் படிப்பை முடித்தவரான பிரதமர் ராம்கூலம் தனது நாட்டில் நவீன முறையிலான சிகிச்சைகளை அளிப்பதில் நேரிடும் சிக்கல்களையும் சவால்களையும் புரிந்து கொள்ளக்கூடியவர். மொரீசியஸ் நாட்டு மக்களுக்காக பேராசிரியர் பாலாஜி வழங்கிவரும் முகச்சீரமைப்பு அறுவைச் சிகிச்சைச் சேவையை  பிரதமர் பாராட்டினார்.  முகச்சீரமைப்பு பற்றி தான் எழுதிய ' Clinical Craniomaxillofacial Surgery ' என்ற நூலை பேராசிரியர் பாலாஜி பிரதமர் ராம்கூலத்திடம் கையளித்ததாக பாலாஜி பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவமனை நிருவாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15