சாயி ஸ்ருதி லயா கலைக்கூடத்தின் இயக்குநர் வைத்திய கலாநிதி சாயி லக்ஷ்மி லோகீஸ்வரனின் மாணவியும் திரு திருமதி கந்தகுமாரின் புதல்வியுமான கரிஷ்மா கந்தகுமாரின் கர்நாடக இசை அரங்கேற்றம் எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு 06இல் அமைந்துள்ள இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர், “செஞ்சொற் செல்வர்”, கலாநிதி ஆறு. திருமுருகன் பிரதம விருந்தினராகவும் யாழ். பல்கலைக்கழகத்தின் இசைத்துறை, முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கரிஷ்மா கந்தகுமார் கனடா நாட்டை பிறப்பிடமாகக் கொண்டிருப்பினும் இசையின் மீது கொண்ட அதீத விருப்பத்தாலும் தன் தந்தையின் கனவை நிறைவேற்றும் ஆவலாலும், தந்தையின் பத்தாண்டு நினைவுநாளில் அவரை நினைவுகூர்ந்து, பன்னிரு ஆண்டுகளாக தான் கற்ற கர்நாடக இசையின் பலனாய் அரங்கப் பிரவேசம் காணவுள்ளார்.
2015ஆம் ஆண்டில் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு, வயலின், வீணை, ஹார்மோனிய கலாவித்தகர் சாயி லக்ஷ்மி லோகீஸ்வரனால் நிறுவப்பட்ட சாயி ஸ்ருதி லயா கலைக்கூடம் ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக பல மாணவர்களை இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் இசைத்துறையில் ஈடேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM