போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதியொருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (17) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இராஜாங்கனை யாய பகுதியை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த சிறைக் கைதி கடந்த 13ஆம் திகதி போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறைக் கைதி சிறைச்சாலையின் கழிவறைக்குள் சென்று உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும், அதைக் கண்ட சிறைச்சாலை அதிகாரிகள், கைதியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சிறைக் கைதியின் மரணம் தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM