மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நிவின் பாலி கதையின் நாயகனாக அதிலும் குறிப்பாக இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சுப்பர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்திற்கு 'மல்டிவெர்ஸ் மன்மதன் 'என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆதித்யன் சந்திரசேகர் எழுதி இயக்கும் 'மல்டிவெர்ஸ் மன்மதன்' எனும் படத்தில் நிவின்பாலி முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்த திரைப்படத்தின் கதையை ஆனந்த் எஸ். ராஜ், நிதி ராஜ், அனீஸ் ராஜசேகரன், ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். அதிரடியான எக்சன் காட்சிகள், புராணக் கதை சம்பவங்கள், மல்டிவெர்ஸ் சூழலுக்கான வி எஃப் எக்ஸ் கட்சிகள், ஆகியவை இடம் பிடித்திருக்கும். பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM