நடிகை ரூபா கொடவாயூர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ' எமகாதகி ' எனும் திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் பெப்பின் ஜோர்ஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ' எமகாதகி' எனும் திரைப்படத்தில் ரூபா கொடவாயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெசின் ஜார்ஜ் இசையமைத்திருக்கிறார். எமோஷனல் ஹாரர் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை நாய்சத் மீடியா வொர்க்ஸ் மற்றும் அருணா ஸ்ரீ என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஸ்ரீனிவாச ராவ் ஜலகம் மற்றும் கணபதி ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஒரு இளம் பெண்ணின் மரணத்தால் ஒரு கிராமமே பாதிக்கப்படுகிறது. இதை பின்னணியாக கொண்டு அமானுஷ்யமான ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு நிச்சயமாக அற்புதமான திரையரங்க அனுபவத்தை 'எமகாதகி' வழங்கும் '' என்றார்.
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் ஹாரர் திரில்லர் ஜேனரில் வெளியாகும் படங்களை ரசிக்கும் ரசிகர்களிடையே ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM