புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய தோட்டத்தை” கையளிக்கும் நிகழ்வு : ஜப்பானிய தூதுவர் பங்கேற்பு

Published By: Digital Desk 2

17 Feb, 2025 | 01:26 PM
image

சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தினமான கடந்த சனிக்கிழமை 15ஆம் திகதி  இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா, "Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)" திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான "SUWA ARANA" நோய்த்தடுப்பு பராமரிப்பு மையத்தின் குணப்படுத்தும் தோட்டத்தைக் கையளிக்கும் விழாவில் கலந்துகொண்டார். 

Suwa Aranaவை இயக்கும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் லங்கா ஜயசூரிய திசாநாயக்க, புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தலில் இத்தோட்டத்தின் பங்கு தொடர்பாக எடுத்துரைத்தார்.

அத்துடன், புற்றுநோயானது மனம், உடல் மற்றும் உயிரை பாதிக்கிறது என்பதை வலியுறுத்தினார்.

மேலும், இந்த குணப்படுத்தும் தோட்டமானது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆறுதல், புதுப்பித்தல், வலிமையைக் கண்டறிவதற்கான அமைதியான இடமாக விளங்குகிறது. 

நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் கவலைகளைத் தணிப்பதற்கும், அவர்கள் மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கும் இந்தத் திட்டம் பங்களிப்பு செய்துள்ளது என்று தூதுவர் இசோமட்டா மகிழ்ச்சியோடு தெரிவித்தார். 

ஜப்பானிய குழந்தைகளின் நல்வாழ்வு மையங்களுடனான எதிர்கால பரிமாற்றங்கள் மூலம் நோய்த்தடுப்பு பராமரிப்பு மேலும் ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35