யாழ். சென் ஜோன்ஸ் அணிக்கும் மாத்­தளை புனித தோமஸ் அணிக்கும் இடையில் யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற 19 வய­துக்­குட்­பட்ட பாட­சாலை கிரிக்கட் போட்டி நேற்­று­முன்­தினம் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தது.

இப் போட்­டியில் முதல் இன்­னிங்ஸில் 260 ஓட்­டங்­களைக் குவித்த செய்ன்ற் ஜோன்ஸ், புனித தோமஸ் அணியை அதன் முதல் இன்­னிங்ஸில் 86 ஓட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­ப­டுத்­தி­யது.

அத்­துடன் புனித தோமஸ் அணியை இரண்­டா­வது இன்­னிங்ஸில் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தா­டு­மாறும் செய்ன்ற் ஜோன்ஸ் அழைத்­தது.

முத­லா­வது இன்­னிங்ஸில் மிகத் துல்­லி­ய­மாக பந்­து­வீ­சிய செய்ன்ற் ஜொன்ஸ் அணி­யினர், இரண்­டா­வது இன்­னிங்ஸில் சோபிக்கத் தவ­றி­யதைப் பயன்­ப­டுத்­திக்­கொண்ட புனித தோமஸ் அணி­யினர் நிதா­னத்­துடன் துடுப்­பெ­டுத்­தாடி ஆட்­டத்தை வெற்றி தோல்­வி­யின்றி முடித்­துக்­கொண்­டனர்.

செய்ன்ற் ஜோன்ஸ் சார்­பாக துடுப்­பாட்­டத்தில் சிரேஷ்ட வீரர்­களில் ஒரு­வ­ராக ஜெனி ஃப்ளெமின் செப­மா­லைப்­பிள்ளை, தேவப்­பி­ரஷாந்த் சந்­தி­ர­மோகன் ஆகி­யோரும் பந்­து­வீச்சில் கானா­மிர்தன், நிலோஜன் மகா­லிங்கம், கபில்ராஜ் கன­க­ரட்ணம் ஆகியோரும் பிர­கா­சித்­தனர்.