பேராதனை போதனா வைத்தியசாலையில் பெருங்குடல் மற்றும் கல்லீரல் பரிசோதனைக்கு உபயோகப்படுத்தும் இயந்திரங்கள் பழுதடைந்துள்ள நிலையில், அங்கு சிகிச்சை பெறும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதன்படி, அந்த வைத்தியசாலையில் நான்கு ஈ.ஆர்.சி.பி. இயந்திரங்கள் உள்ளதாகவும் அவற்றில் மூன்று இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தவிர கல்லீரல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் ஓரிடமாக பேராதனை விளங்குகிறது.
இந்நிலையில், பேராதனை போதனா வைத்தியசாலையில் இயந்திரங்கள் பழுதடைந்த காரணத்தால் குடல் புற்றுநோய்கள் போன்றவற்றை நோயாளர்களில் கண்டறிய முடியாதிருப்பதாகவும் இப்பரிசோதனைகளை தனியார் வைத்தியசாலைகளில் செய்வதாயின் 45,000 முதல் 50,000 ரூபா செலவிட நேரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய பரிசோதனைகளை செய்வதற்காக இந்த நோயாளர்களை கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்புவதால், அந்த வைத்தியசாலையில் சன நெரிசல் காணப்படுவதோடு பரிசோதனையை மேற்கொள்வதிலும் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, பேராதனை போதனா வைத்தியசாலையில் பரிசோதனை இயந்திரங்கள் பழுதடைந்தமை தொடர்பில் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM