(எம்.மனோசித்ரா)
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று திங்கட்கிழமை (17) இடம்பெற்றது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஒன்று கூடினர்.
இந்த விசேட கூட்டத்தில் வரவு செலவுத்திட்டம் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அரசாங்கம் தேர்தல் மேடையில் வழங்கிய வாக்குறுதிகளை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்றியுள்ளதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்துக்கு உந்துதல் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இராசமாணிக்கம் சாணக்கியன், கயந்த கருணாதிலக்க, ரோஹித அபேகுணவர்தன, புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் அனுராத ஜயரத்ன, எஸ்.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தயாசிறி ஜயசேகர, ரஞ்சித் மத்தும பண்டார, வி. இராதாகிருஷ்ணன், பத்மநாதன் சத்தியலிங்கம், ஜே.சி.அலவத்துவல, சாமர சம்பத் தசநாயக்க, ரவி கருணாநாயக்க, டி.வி சானக்க, காதர் மஸ்தான், முஹமது இஸ்மாயில் முத்து முஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM