ஈரான் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் மூவர் காயமடைந்தனர்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு பாராளுமன்றம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. 

மேலும், அந்த நபர் பாராளுமன்றத்துக்குள் சிலரை பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.