இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரான அகியோ ஐசோமாட்டா "சமாதானத்துக்கான பாதைகள்" செயற்றிட்டத்தால் ஆதரவளிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரைச் சந்தித்தார்.
இந்த விஜயமானது ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் கிறிசாலிஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட வணிக மேம்பாடு மற்றும் தொழில்முனைவோருக்கான பயிற்சிகளின் தாக்கத்தை எடுத்துக்காட்டியது.
அனுராதபுரம், மட்டக்களப்பு, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களில் அமுல்படுத்தப்படும் இந்த முன்முயற்சியானது வணிகத் திட்டமிடல், நிதியியல் அறிவு மற்றும் உற்பத்தி மேம்பாடு ஆகியவற்றில் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலமாக 460க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோருக்கு வலுவூட்டியுள்ளது.
இந்த பயிற்சிகள் பங்கேற்பாளர்கள் தங்களது வணிக உத்திகளைச் செம்மைப்படுத்திக்கொள்ளவும் சந்தை அணுகல் மற்றும் தங்களது வணிகங்களை மேம்படுத்திக்கொள்ளவும் உதவியுள்ளன.
இந்த நிகழ்வில் தூதுவர் ஐசோமாட்டா பெண் தொழில்முனைவோரால் தயாரிக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புகளைப் பார்வையிட்டதுடன் அவர்களுடன் உரையாடி, அவர்களின் அனுபவங்கள் மற்றும் சாதனைகள் தொடர்பில் நேரடியாக அறிந்துகொண்டார்.
இதில் கலந்துகொண்ட தூதுவர் ஐசோமாட்டா கூறுகையில்,
"ஜப்பான் நலிவடைந்த சமுதாயங்களில் உள்ள பெண் தொழில்முனைவோர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முனைப்பாக ஆதரவளித்து வருகிறது.
இந்த செயற்றிட்டம் இயலளவு மேம்பாட்டை தாண்டி, பெண்கள் தலைமையிலான வணிகங்களைத் தக்கவைத்து, சமாதானத்தை நிலைநாட்டவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் உதவுகிறது. பொருளாதார ரீதியாக முனைப்பாக மாறுவதன் மூலமாக பெண்கள் தங்களது சமுதாயங்களில் தீர்மானம் எடுக்கும் மற்றும் தலைமைத்துவ வகிபாகங்களில் அதிக செல்வாக்கு பெறுவதுடன், நீடித்த மற்றும் உருமாற்றத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றார்.
ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் ஜப்பானின் நீண்டகால கூட்டாண்மையின் ஒரு பகுதியாக இந்த முன்முயற்சியானது பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களின் பொருளாதார மேம்பாடு குறித்த உறுதிப்பாடுகளை வலுப்படுத்தி, நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலுடன் இணங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM