டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் 310 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி கண்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (14) கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
நாடு முழுதும் தற்பொழுது 310 டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் தமது தொழிலை உறுதிப்படுத்துமாறு கோரி மிக நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்துள்ளதுடன் அடிக்கடி சத்தியாகிரகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதற்கு நிதி அமைச்சினால் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இன்னும் இரண்டரை மாதத்துக்குள் இந்த நியமனம் வழங்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM