மின்சாரம் தாக்கி வேலணை செட்டிபுலம் சிறுவன் பலி

Published By: Vishnu

17 Feb, 2025 | 03:31 AM
image

வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த  9 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த  9 வயதுடைய சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே குறித்த அனர்த்தத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.

இது குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில்,

சம்பவம் இடம்பெற்ற போது எவரும் வீட்டில் இல்லை. குறிப்பாக இன்று மாலை குறித்த சிறுவன், அயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு தயார் சென்றிருந்த நிலையில்  வீட்டில் தனிமையில்  இருந்துள்ளார்.

இதன்போது தொலைக்காட்சி பார்ப்பதற்காக மின் இணைப்பை ஏற்படுத்த சிறுவன் முற்பட்ட வேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நம்பப்படுகின்றது.

வீட்டுக்கு உறவினர்கள்  வந்த போது சம்பவத்தை அவதனித்து சிறுவனை சிகிச்சைக்காக வேலணை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆனாலும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

இதே நேரம் சிறுவனின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுபப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15