(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கிடையிலான பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் வகையில் சிலர் திட்டமிட்டு செயற்படுகின்றனர். பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள எம்மை ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்கள் என்றும் விமர்சிக்கின்றனர். எனவே ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட இது தொடர்பில் ஸ்திரமானதொரு தீர்மானத்தை எடுக்கும் வரை தான் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து பல்வேறு திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்கள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. ஜனவரியில் கூடிய இரு கட்சிகளினதும் செயற்குழுக்களில் இரு தரப்புக்குமிடையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இரு கட்சிகளும் ஒரே பாதையில் பயணிப்பதற்கான வழியை எவ்வாறு உருவாக்குவது மற்றும் இணக்கப்பாட்டை எட்டுவது என்பதே எமக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலாகும். நீண்டகால இணக்கப்பாட்டை எட்டும் நோக்கிலேயே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தியின் தனித்துவத்தன்மையை பாதுகாத்துக் கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆலோசனை வழங்கியுள்ளார்.
எவ்வாறிருப்பினும் தற்போது பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காதவர்களால் கூட பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. எனவே இது தொடர்பில் மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவைக் கூட்டி கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஸ்திரமானதொரு தீர்மானம் எடுக்கப்படும் வரையில் நான் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க மாட்டேன்.
அடுத்த செயற்குழு கூட்டத்திலும், முகாமைத்துவக் குழு கூட்டத்திலும் நான் இது தொடர்பில் அறிவிக்கவுள்ளேன். எவரது பெயரையும் குறிப்பிட்டு நான் எதனையும் குறிப்பிட விரும்பவில்லை. தற்போது பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கட்சி ரீதியில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டால் அதற்கு அனைவரும் ஒற்றுமையுடனும் இணைக்கத்துடனும் செயற்பட வேண்டும். அதனை விடுத்து முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டால் யாருக்கும் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
கட்சி ரீதியில் இணக்கப்பாடு எட்டப்படாமல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது பிரயோசனமற்றதாகும். கட்சிக்கான பணிகளில் ஈடுபடும் எம்மை சிலர் துரோகிகளைப் போன்று சித்தரிக்கின்றனர். பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆறு உறுப்பினர்களில் பொதுச் செயலாளர் மற்றும் தேசிய அமைப்பாளரான என்மீதும் மாத்திரம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே ஸ்திரலமானதொரு தீர்மானம் எடுக்கப்படும் வரை நான் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM